பெண்

எனக்கு அறிமுகமான உலகம் எனது பார்வையில்

My Photo
Name: Mangai
Location: India

எனது கதைகளின் கரு :உறவுகள், அத்ன் ஊடே யான சிக்கல்கள், மெல்லிய இழை களே யான எல்லைக்கோடுகள் , வாழ்க்கைச் சக்கிரத்தில் சிறியவர்களின் முக்கியவததில் இருந்து பின் தங்கிப்போன பெரியோர்கள், உணர்வுகள்

Wednesday, January 9, 2008

சிவாஜியின் அங்கவை சங்கவை ஒரு எழுத்தாளனின் வெற்றியை குறிக்கிறது


என்ன் இது எல்லோரும் திட்டும் விஷயம் எப்படி ஒருவனின் வெற்றியாயிற்று. ஆம் முரண்பாட்டை பட்டென்று சொல்லும் வெற்றி.

ஒரு தமிழ் பெண் எப்படி இருக்க வேண்டுமாம்?

ஒரு அழகான பெண் என்று சொல்லப் படும் உயரம் மற்றும் அளவான அங்க அமைப்புக ளோடு, வெள்ளையான, களையான முகத்தோடு இருக்க வேண்டும்.

தாவணி அணிந்து (அல்லது புடவை அணிந்து - கலாசார உடை அடையாளம்), குனிந்த தலை நிமிராமல் ( பின்னால் சுற்றும் ஜொள்கள் அறியாமல்) கோவிலுக்குச் சென்று ( அடக்கத்தின் அடையாளம்), வீட்டில் கூட அந்த அடையாளம் மாறாமல் ( சவுகரியம் கருதி Nighty எல்லாம் அணியாமல்), பாடத் தெரிந்து, ஆடத் தெரிந்து(கர்நாடக இசை. தமிழ்க் கலையோ Rap -ஓ அல்ல) பின் வேலைக்கும் போகத் தெரிந்து(புடவை அணிந்து) இப்படியாக இருத்தல் வேண்டும்.
நாயகனாகிய இளைஞன் (?) வந்து காதல் விண்ணப்பம் செய்யும் போது கண்டதும் காதல் என்று பின்னால் போய்விடாமல் ( ஆறுதலான விஷயம் தான்) ஆனால் கறுப்பு என்ற காரணத்தால் மறுத்து விடாமல் றுப்புத் தான் எனக்குப் பிடித்த கலரு என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அதே இளைஞன் தமிழ் பெண்ணை விரும்பும் இளைஞன் அந்த தமிழ் பெண் சிவாஜி படத்தில் வருவது போல் ஒரு கடைக் கோடி கிராமத்துப் பெண்ணை நினவுறுத்தும் விதமாக, உயரம் மற்றும் அங்க அமைப்புகள் மேற்கூறிய விதத்தில் பொருந்தாமல் இருந்தால் அவள் எல்லாம் தான் திருமணம் செய்யும் தகுதிக்கு உரியவள் அல்ல (Chudidhar அணிந்து வந்தாலும்) என்பது மட்டும் அல்ல அந்த திசைக்கே ஒரு கும்பிடு என்று சொல்லும் முரண்பட் துணிந்து சொல்லிய வெற்றி.

இந்த செய்தியை தமிழ் நாட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினி யை வைத்து, பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரை வைத்து, சின்னக் கலைவாணர் விவேக்கை வைத்து, தமிழ் நெஞ்சங்களில் ஒரு நல்ல பட்டிமன்ற பேச்சாளர் என்ற பெயர் எடுத்த சாலமன் பாப்பையா வைத்து ,

அழகுக் கதாநாயகியின் எதிர் வீட்டிலேயே குடி வைத்து நாயகனை அங்கே பழக விட்டு இங்கே பெண் எடுக்க வைத்த துணிச்சல்.

ஒவ்வொரு தமிழின் கயையும் வைத்து அவன் கண்ணைக் குத்திய துணிச்சல்.

ஒரு மிழ் பெண்ணை அடையாளம் காட்ட வெளி மாநில வெள்ளைப் பெண்ணை வைத்து சொல்லத் தலைப் பட்ட இயக்குநரின் வியாபார மோகத்தையும் ( காவிரி ஆறு பாட்டில் தமிழ் கிராமங்களை சொல்லத் தலைப்பட்ட இயக்குநர் அதை மலையாள நயனை வைத்தது - அவர் உடுத்தியிருக்கும் உடை தமிழ் நாட்டில் எங்கு போடுகிறார்கள், பின் தமிழ் பெண் நாயகி பாடல்களில் மட்டும் Hollywood பெண் ஆகி விடும் வியாபார தந்திரம்),

தான் ஒரு கறுப்பழகன் என்று வெள்ளை நாயகிகள் கொண்டு பல படங்களில் சொல்லத் தலைப்பட்ட ரஜினியின் மோகம்,
தமிழ் தமிழ் என்று கூவும் நாம் தமிழ் அல்லாத கதாநாயகிகளையே இங்கு பெறுவாரியாக ஆதரிக்கும் விருந்தோம்பலையும்
நகைச்சுவை காட்சிக்குள் வைத்து சொல்லிய துணிச்சல்.

ராதிகவையும், த்ரிஷவையும் வெள்ளை அடித்தே தான் நாம் பார்த்து வருகிறோம்.
வெளிநட்டுப் பெண்கள் வாழ்க்கை முறை பார்த்து வெலெ வெலத்து தமிழ் நாட்டில் வந்து பெண் டுக்கும் நம் இளைஞர்கள் அந்த 'இரு' பெண்கள் போல் இருப்பவர்களை யா விரும்பி திருமணம் செய்கிறார்கள்? இல்லை, இங்கேயே வாழும் நாம தான் நம் பிள்ளைகளுக்கு அப்படி திருமணம் செய்கிறோமா?

தமிழ் பெயர் நல்லா தான் இருக்கு. ஆனால் தமிழ் செல்வி என்ற பெயர் ரொம்ப பழமையா இல்லை. அங்கவை சங்கவை எல்லாம் ரொம்ப பழசா இருக்கே என்று நினக்கும் நம் தமிழ் நெஞ்சங்களை ஒரு குத்து குத்தி இருக்கும் துணிச்சல்.

கிடைத்த இடைவெளியில் தன் 'நச்' சிறு கதையை எழுதி விட்ட கதாசிரியரின் துணிச்சல்.


இது தமிழ் நாட்டின் முரண்பட் வெளிப்படுத்தும் துணிச்சல்.


கதாசிரியரை, சாலமன் பாப்பையவை திட்டுவது விடுத்து, உண்மை என்ன வென்று பார்க்க வேண்டும்.

கறுப்புக் காத நாயகர்கள் எங்கிருந்து வந்தாலும் நம் பக்கத்து விட்டு பிள்ளை போல் இருப்பதாக ஏற்கும் ம் நம் நாயகிகள் மட்டும் வெள்ளை பொம்மை போலிருக்க வேண்டும் என்று நினைப்பதை நிறுத்த வேண்டும்.
திருமணத்திற்குப் பெண் எடுக்கும் போது பெண் நிறம் குறைவாக இருந்தால் பொருளாதாரம்
கொண்டு
சமன் படுத்தி விட்டால் சரி என்று நினைப்பதை விட்டு விட வேண்டும்.


இன்னொன்று கூட செய்யலாம். நிற மாற்றம் செய்யாமல் நம் தமிழ் பெண்களை படங்களில் நாயகிகள் ஆகக் காட்ட துணிந்தால் வரி குறைப்பு செய்யப் படும் என்று ஊக்கம் கூடக் கொடுக்கலாம்.

கனி மொழி கொஞ்சம் அப்பா கிட்ட சொல்லிடுங்க.

இணையதளத்தில் ஜாதி மத துஷ்பிரயோகங்கள், வன்முறை தூண்டுதல் செய்தால் அது Cyber Crime-ன் கீழ் வருமா?

நான் இணையதளத்தை ஒரு Technology Informative Center ஆகவே பார்த்து வந்திருக்கிறேன்.

மிகவும் சமி காலமாகத் தான் நான் இணையதளத்தில் ஒரு பொதுவான informative தேடல்களுக்கு உபியோகப் படுத்தத் துவங்கினேன். அப்போது தான் தமிழ் வலைப்பதிவுலகம் எனக்கு அறிமுகமாகியது. முதலில் என் கண்களுக்கு வெகு சுவாரசியமான விஷயங்களும், மிகவும் பயனுள்ள விஷயங்களுமே தென்பட்டன. சந்தோஷம் தாங்கவில்லை. இத்தனை நாள் இங்கு வராமல் போய்விட்டோமே என்று என்னை கடிந்து கொண்டேன். பத்திரிக்கைகளில் அதிகம் இடம் பெரும் கவர்சிகரமான விஷயங்கள் போல் அல்லாமல் எவ்வளவு நல்ல விஷயங்கள் எல்லாம் பகிர்ந்து கொள்கிறார்கள் என்று ஆச்சரியப் பட்டேன்.

நானும் ஒரு வலைப்பதிவு துவங்கினேன்.

ஆனால் என் மகிஷ்ச்சி அதிக நாள் நீடிக்க வில்லை.

இங்கு தணிக்கை முறை இல்லை என்பதால் ஜாதி, மத, இன வேறுபாடுகள் ஊக்குவிக்கப் படுவதும், அது சார்ந்த வன்முறை தூண்டு ோல்ள் இடம் பெறுவதும், ஒரு விஷயத்தை முன் வைக்கும் போது அதற்கு உரிய அதாரங்களை விட தனி மனித கணிப்புகளே மேலோங்கி நிற்பதும் என்னை அதிர்ச்சி கொள்ளச் செய்கிறது.

நாம் படித்தவர்கள் செய்யும் காரியமா செய்து கொண்டிருக்கிறோம் என்று எண்ணச் செய்கிறது.

ஆக்க பூர்வ சிந்தனைகள் ஊக்குவிக்கப் படுவதை விட காழ் ப் புணர்ச்சிகள் சில இடங்களில் மேலோங்கி இருக்கிறது.

இந்த நிலை தமிழில் மட்டு மல்ல நிறைய groups என்கிற சிறு சிறு குழுக்கள் சேர்ந்து மொழி தாண்டி நடை பெறுகிறது என்றும் தோன்றுகிறது.

நாம் இந்தியர்கள் என்கிற அடிப்படையை அசைத்துப் பார்க்கும் இந்த விஷயங்கள் இணையதள குற்றங்களின் கீழ் வருமா வராதா என்று எனக்குப் புரியவில்லை. இது வரை இல்லை என்றால் இனி யோசிக்க வேண்டும்.

அல்லது இந்திய ஒற்றுமை கேள்விக்கூரியதாக ஆவதில் இணையதளம் முக்கிய பங்கு வகிக்கக் கூடும்


உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கர்நாடக இசைக்கு மார்கழி என்றால் தமிழிசைக்கு சித்திரையைக் கொடுத்து விடுவோமே

மார்கழி மாதம் தெய்வ வழிபாட்டுக்கு மிகவும் உகந்ததாக கருதப் படுவதால் சபாக்களில் பாட்டுக் கச்சேரிகள் ம்ர்க்களப் படுகின்றன.
அங்கே கர்நாடக இசையே முக்கிய பங்கு வகிக்கிறது.
மொழி சமஸ்கிருதம் என்றாலும், தெலுங்கென்றாலும், தமிழ் என்றாலும் இசை கர்நாடக இசை தான் அங்கே இடம் பெறுகிறது.

தமிழிசையை ஊக்குவிக்க என்று ஒரு மாதத்தை ஒதுக்கிவிட்டால் என்ன?
தமிழ் வருடத்தின் முதல் மாதமான சித்திரையில் தமிழ் இசையை ஊக்குவிக்கும் பொருட்டு சபாக்களில் அல்லது வேறு இடங்களில் தமிழ் இசையில் உருவான பாடல்கள், கிராமியப் பாடல்கள், நாட்டுப் புறப் பாடல்கள், நாட்டுப் புறக் கலைகள், நாட்டிய நாடகங்கள் என்று ஏற்பாடு செய்யலாமே.

நலிந்து கொண்டு இருக்கும் கலைகளும் தழக்குமே.

உங்கள் கருத்துக்களை வரவே்கிறேன்.

Tuesday, January 8, 2008

எது ஆணாதிக்கம்-உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்

ஆணாதிக்கம் எது என்று ,

பெண்கள் கருதுகிறார்கள்?
ஆண்கள் கருதுகிறார்கள்?

உங்கள் கருத்துக்களை வரவே்கிறேன்.

எனது ஆண் பெண் பற்றிய சிந்தனை

ஆண் பெண் வெற்றி தோல்வி என்ற தலைப்பில் இங்கு நான் ஏற்கனவே எழுதியது.

முகம் சிவந்து கண் கலங்கி தலை தாழ்த்தும்
பெண்ணிடம் ஆண் தோற்றுப் போகிறான்
பெண்ணின் அடக்கம் ஆணின் வெற்றியாக உணரப்படுவதால்

கோபம் கொண்டு குரல் உயர்த்திப் பேசும்
பெண் ணிடம் தோற்றுப் போகிறாள்
பெண்ணின் எதிர்ப்பு ஆணின் தோல்வியாக உணரப்படுவதால்.

வன்முறையை எதிர்த்து ஒரு வோட்டு வேட்டை

வன்முறை என்னும் செயலை அல்லது அதனை தூண்டும் செயலை யார் செய்தாலும் அந்த செயலை கண்டிப்போம்
என்ற கருத்தை உடையவர்கள் இங்கு ஒரு பின்னூட்டம் இட்டுச் செல்லவும்.

கண்டிப்போம் என்று ஒற்றை சொல்லும் எழுதலாம் அல்லது வன்முறைக்கு எதிரான வார்த்தைகளை வன்முறை இல்லாமல் தெரிவிக்கலாம்.

Saturday, January 5, 2008

செவ்வாய் தோஷத்தை எப்படி வியாபாரம் ஆக்குவது?

செவ்வாய் தோஷத்தை எப்படி வியாபாரம் ஆக்குவது?

நம்ம ரா திகா (செல்வி) இடம் கற்றுக் கொள்ளவும்.

வீட்டில் செவ்வாய் தோஷமுள்ள பெண்ணை வைத்துக் கொண்டு மாப்பிள்ளை தேடி ஒரு பக்கம் பெற்றோர் அலைந்து கொண்டிருக்க, பெண் முதிர் ன்னியாகி கவலை கொண்டிருக்க,

அதை வியாபாரமாக்கி பல அத்தியாயங்களும் பெரும் திருப்பங்களுமாக பல வாரங்கள் வெற்றிகரமாக கொண்டு சென்ற செல்வியின் வியாபார த்திக்கு தனி விருதே கொடுக்கலாம்.
அந்த மாயா பெண்ணுக்கு ஒரு கல்யாணம் ஆகி கணவன் இறந்து விட்டதற்கு காரணம் எல்லாம் சொல்லி, அதனால் தோஷத்தை மறைத்து இன்னொரு கல்யாணம் ஏற்பாடு செய்ய முனைய, விஷயம் தெரிந்த நாயகன் திருமணத்தை தவிர்க்க செய்யும் முயற்சிகள்,
இடை இடையே அந்த பெண்ணை ஒரு பாம்பு மாதிரி வேறு காட்டி

கொடுமையிலும் கொடுமை.

செவ்வாய் தோஷத்தை நம்புவதா வேண்டாமா என்பது ஒரு புறம் இருக்கட்டும்.

செவ்வாய் தோஷம் உள்ளது என்று எந்த ஆணும் பெண்ணும் கவலை கொள்ள வேண்டாம்.
நன்கு படியுங்கள். நல்ல உத்தியோகம் தேடிக் கொள்ளுங்கள். இந்த தோஷ மே உங்களுக்கு ஒரு நல்ல துணையைத் தேடித் தரும் வாய்ப்பாக அமையும்.
எப்படி என்றால்,
இந்த தோஷம் இருப்பவர்கள் அதே தோஷம் உள்ள ஒருவரை திருமணம் செய்ய வேண்டும் என்று சொல்லப் படுவதால்,
options மிகக் குறைவாக இருப்பதால் பெரும்பாலும் திருமணத்திற்கு இடைஞ்சலாக இருக்கும் வரதட்சணை, ஏற்ற தாழ்வுகள் இந்த திருமணங்களில் பார்க்கப் படுவதில்லை. அதனால் நல்ல துணை அமைந்தவர்கள் நிறைய பேர் எனக்குத் தெரியும்.

நான் இறந்து எனக்கு நானே பிறப்பேன்

இது என்ன உளறல் என்று கேட்கிறீங்களா?

இது செல்வி 'மெகா' தொடரில் வந்த தாய்மை sentiment.

செல்வியின் தம்பி நிரஞ்சனின் மனைவி கற்பமுற்று இருப்பாள்.
கர்பத்தில் இருக்கும் குழந்தை வளர்ந்தால் தாயின் உயிருக்கு ஆபத்து என்ற நிலை.
விஷயத்தை மறைத்து வைத்திருப்பாள் மனைவி. உண்மை தெரிந்தவுடன் கரு கலைக்க கணவன் முயற்சி எடுக்கும் போது அவள் உணர்ச்சி ங்க கூறும் வசனம் தான் அது.


அந்த பெண்ணின் தாய்மை உணர்வை மதித்தாலும் குழந்தையின் உயிரை தக்க வைக்க சொல்லும் காரணம் அபத்தம். கரு உருவாகி அது பிறக்கும் தறுவாயில் இறக்கப் போகும் அவள் எப்படி அந்த குழந்தையின் உயிராக ஆக முடியும்?

சினிமாவில் முன்னெல்லாம் ஒரு உணர்ச்சி சம்பவம் இறுதிக் காட்சியில் வரும். கதாநாயகன் அல்லது நாயகியின் தாய் அல்லது தந்தை இறக்கும் போது நாயகிக்குப் பிறக்கும் குழந்தை அந்த இறந்த போன தாய் அல்லது தந்தையின் மறு பிறவியாகக் கொண்டு ஒரு sentiment வசனம் வரும்.


கரு உருவாகி பிறக்கும் வரை உள்ளே இருப்பது உயிர் இல்லாமல் வேறு என்ன வளர்கிறது?
இப்போ ஒரு பிரசவததிற்கு முன் குறைந்தது 6-7 தடவை scan செய்து வளர்ச்சியை காட்டுகிறார்கள். அது உயிர் இல்லாமல் வேறு என்னவோ?
sentiment காட்சிக்கு இப்படி ஒரு முட்டாள் மூடத்தனத்தை வைக்க வேண்டுமா?

செல்வி தொடரும் மூடத்னங்களும் என்று ஒரு தலைப்பு வைத்து தனியாக ஒரு பதிவு எழுதும் அளவு அவ்வளவு அபத்தங்கள் அதில் நிறைந்து இருக்கிறது.