பெண்

எனக்கு அறிமுகமான உலகம் எனது பார்வையில்

My Photo
Name:
Location: India

எனது கதைகளின் கரு :உறவுகள், அத்ன் ஊடே யான சிக்கல்கள், மெல்லிய இழை களே யான எல்லைக்கோடுகள் , வாழ்க்கைச் சக்கிரத்தில் சிறியவர்களின் முக்கியவததில் இருந்து பின் தங்கிப்போன பெரியோர்கள், உணர்வுகள்

Wednesday, January 2, 2008

பலூன்மாமாவின் மதங்கள் பெண்களுக்கு எதிரானதா என்கிற கேள்விக்கான பதில்

மதங்கள் பெண்களுக்கு எதிரான அடக்குமறைகள் செய்கிறதா என்பதை பார்ப்பதற்கு முன்,

இன்று பெண் சுதந்திரம் என்பது எப்படி தவறாகப் பிரயோகிக்கப் படுகிறது என்பதைப் பற்றிய எனது கருத்துக்களை நீங்கள் கொஞ்சம் படியுங்கள்.
அதில் சில இதோ,

http://mangaiival.blogspot.com/2007/12/blog-post_20.html
http://mangaiival.blogspot.com/2007/11/2.html
http://mangaiival.blogspot.com/2007/11/1.html
http://mangaiival.blogspot.com/2007/12/blog-post_4734.html


எனக்கு இது மாதிரி எழுதுவதில் முன் அனுபவம் ஏதும் இல்லை. என் முதல் எழுத்து அனுபவமே இந்த வலைப்பதிவில் தான் என்பதால் சுருக்கமாக எழுதும் பக்குவம் இல்லை. கொஞ்சம் நீளமாகவே எனக்கு எழுதத் தெரியும் என்பதால் நான் எழுதிக் கொண்டிருக்கும் இடைவெளியில் நீங்கள் இதனை படித்து வையுங்கள்.

நன்றி.

2 Comments:

Blogger கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

மங்கை,
மதங்களும், கலாச்சாரமும் பெண்ணின் உடல்மீது ஏறித்தான் பயணம் செய்கிறது.பெண்ணின் மீது கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் பட்சத்தில் மதம் அழிந்துவிடும்.முதலில் கேள்வி கேட்கவேண்டியது/புறக்கணிக்க வேண்டியது மதத்தை.

என்று சொல்லி கீழே உள்ள மூன்று கேள்விகளைக் கேட்டு இருந்தேன். இவைகளை நான் சுற்றி வளைத்து கேட்க்கவில்லை. நேரடியாக கேட்ட கேள்விகளுக்கு நீங்கள் எழுதிய சில கதைகளைக் கொடுத்து படிக்கச் சொல்கிறீர்கள். நான் கதைகளை வாசிப்பது கிடையாது. :-) பதில் சொல்வது உங்கள் விருப்பம்.


--------------------
முந்தைய கேள்விகள்
++++++++++++++++++

பெண்களின் உடை ஆண்களுக்கு கிளர்ச்சி ஊட்டுகிறதா?
http://mangaiival.blogspot.com/2007/12/blog-post_5240.html

மங்கை,
நீங்கள் ஏதாவது மத நம்பிக்கை உடையவரா?

(அ) இந்து (பார்ப்பனீயம்) மதம் என்றால், ஏன் அய்யப்பன் கோவிலில் ஒரு பெண் சாமியை தொட்டதிற்கு தீட்டு என்கிறார்கள்.

ஏன் நாப்கின் அணிந்தாலும் தீட்டு என்று சொல்லப்படுகிறது.....

என்று கேள்விகளை எழுப்பி மதத்தை புறக்கணிப்பீர்களா?

(ஆ) கிறித்துவம் என்றால் அதில் உள்ள கருப்பைச் சுதந்திர மறுப்பு (வாடிகன்) , கன்னி மேரி ஏன் கன்னியாக இருக்க வேண்டிய அவசியம்(கணவன் இருந்தும்,குழந்தை பெற்றும்)

என்று கேள்விகளை எழுப்பி மதத்தை புறக்கணிப்பீர்களா?


(இ) இஸ்லாம் என்றால், பலதார மணம், தூதராலேயே குறைத்து மதிப்பிடப்படும் பெண் (ஒர் பெண்ணின் சாட்சி ஒரு ஆணின் சாட்டிக்கு சமம் இல்லை),உடைக் கட்டுப்பாடு...

என்று கேள்விகளை எழுப்பி மதத்தை புறக்கணிப்பீர்களா?

***

January 2, 2008 6:56 PM  
Blogger Mangai said...

nan bathil ezhuthikondirukkiren. antha idaiveliyil ithai padiyungal enru than solli irukkiren. padipathum padikkathathum ungal viruppam.

ithil kobam kolla ethuvum illai.

January 2, 2008 10:56 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home